பள்ளிவாசல்களில் ஒரே தடவையில் 100 பேர் தொழுவதற்கான அனுமதியினை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது.
இதுவரை காலமும் பள்ளிவாசல்களில் ஒரே தடவையில் 50 பேர் மாத்திரமே தொழுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் புனித ரமழானை காலத்தில் பள்ளிவாசல்கள் கடைப்பிடிக்க வேண்டிய 30 வழிமுறைகளை கொண்ட விசேட சுற்றுநிரூபத்தை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ளார். இந்த சுற்றுநிரூத்திலேயே குறித்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை 18 வயதுக்கு குறைந்தவர்களை பள்ளிவாசல்களின் அனுமதிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.