கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 7,546பேர் பாதிப்பு!

கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஏழாயிரத்து 546பேர் பாதிக்கப்பட்டதோடு 36பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை பத்து இலட்சத்து 78ஆயிரத்து 562பேர் பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளதுடன் 23ஆயிரத்து 392பேர் உயிரிழந்துள்ளனர்.

78ஆயிரத்து 293பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 928பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இதுவரை ஒன்பது இலட்சத்து 76ஆயிரத்து 877பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

Previous articleபள்ளிவாசல்களில் 100 பேர் தொழுவதற்கு அனுமதி!
Next articleமனித ரத்தம் கலந்த சாத்தான் ஷூ!