புத்தாண்டு காரணமாக யாழ். நாகர்ப்பகுதியில் அமைந்துள்ள பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் இன்று மூடப்பட்டு காணப்பட்டன.
இதனால் மக்களது நடமாட்டமும் மிகவும் குறைவாகவே காணப்பட்டது.
பேருந்து போக்குவரத்து சேவைகளும் குறைவாகவே காணப்பட்டதால் பயணிகள் பேருந்திற்காக காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
இதனால் யாழ். நகர்ப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.