யாழ்.திருநெல்வேலி சந்தையுடன் தொடர்புடைய 21 பேருக்கு கொரோனா!

யாழ்.திருநெல்வேலி சந்தையுடன் தொடர்புடைய 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

நேற்றய தினம் சுமார் 145 போின் பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் யாழ்.மாவட்டத்தில் 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

அவர்களில் 21 பேர் யாழ்.திருநெல்வேலி சந்தையுடன் தொடர்புடையவர்களவர். குறிப்பாக திருநெல்வேலி பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் பெண் ஒருவருக்கும் அவருடைய 2 குழந்தைகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் வேலணை பகுதியில் இருவருக்கும், கரவெட்டி பகுதியில் ஒருவருக்கும், தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இதேபோல் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

Previous articleமுல்லைத்தீவில் வாய்க்காலுக்குள் பாய்ந்தது மோட்டார் சைக்கிள்!
Next articleபுத்தாண்டு நாளில் 165 பேர் இரத்தக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி!