மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாமல் 11 கொரோனா நோயாளிகள் மரணம்!

இந்தியா-மும்பைக்கருகே உள்ள 2 தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கிடைக்காததால் இறந்த நோயாளிகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் மும்பைக்கு அருகே பால்கார் மாவட்டத்தில் வாசி-விரார் மாநகராட்சியில் வினாயக், ரித்தி வினாயக் என 2 தனியார் மருத்துவமனைகள் உள்ளன.
அத்தோடு இந்த மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சேர்க்கப்பட்டிருந்த கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காததால் 7 பேர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் ராய்காட்டிலிருந்து மாநில அரசின் சார்பில் வாசி-விரார் மாநகராட்சிக்கு 10 டன் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்ட போதும் அதை மருத்துவமனைகளுக்கு வழங்குவதில் மாநகராட்சி அலட்சியம் காட்டியதே உயிரிழப்புகளுக்கு காரணம் என கூறப்படுகிறது.

Previous articleவாள்வெட்டு கொலையில் முடிந்த நீண்டநாள் பகை!
Next articleபுதுக்குடியிருப்பில் சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்தவர் துாக்கிட்டு தற்கொலை!