புதுக்குடியிருப்பில் சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்தவர் துாக்கிட்டு தற்கொலை!

​புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேராவில் பகுதியில் சிறிலங்கா அரசின் சிவில்பாதுகாப்பு உத்தியோகத்தரும் குடும்பஸ்தருமான ஒருவர் தவறான முடிவினால் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தேராவில் பகுதியினை சேர்ந்த 52 அகவையுடைய ரங்கசாமி ரவிசங்கர் என்ற 4பிள்ளைகளின் தந்தைய அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

15.04.21 இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது வீட்டில் காலை வேளை பணிக்கு செல்ல தயாரான நிலையில் தவறான முடிவினால் வீட்டின் முன் தொங்கிய நிலையில் உடலமாக காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்வருவதுடன் மரணவிசாரணை அதிகாரியின் விசாரணையின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.​

Previous articleமருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாமல் 11 கொரோனா நோயாளிகள் மரணம்!
Next articleபராமரிக்கப்பட்ட கடை ஒன்றின் முன்பாக மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம்!