ரயில் பாதையின் சமிக்ஞை விளக்கு அருகே தடம் புரண்ட ரயில்!

பதுளை – ஹாலிஎல ரயில் பாதையின் சமிக்ஞை விளக்கு அருகே ரயில் தடம் புரண்டுள்ளது.

பதுளை தொடக்கம் கண்டி வரை பயணித்துக் கொண்டிருந்த சரக்கு ரயிலே மேற்படி தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.

இவ்வாறு தடம் புரண்ட ரயிலை சீரமைக்கும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பயணத்தில் இருந்த சில ரயில்கள் பண்டாவளை ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

Previous articleகிளிநொச்சியில் பற்றைக்குள் மீட்கப்பட்ட கார் கொழும்பில் கடத்தப்பட்டதாம்!
Next articleடக்ளஸ் தேவானந்தா கதைத்துத்தான் விடுதலையானேன் என்றால், ரிஐடியிடமே திரும்பிச் செல்வதா? மணிவண்ணன் கேள்வி!