யாரும் பயப்பட வேண்டாம் – செந்தில் அதிரடி விடியோ!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் செந்தில், தன்னுடைய உடல்நிலை குறித்து விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மூத்த திரைப்பட நடிகரான செந்தில், சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தன்னுடைய உடல்நிலை பற்றி தன் மூத்த மகனுடன் இணைந்து விடியோ வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் செந்தில் கூறியதாவது:

எனக்கு கொரோனா வந்தது உண்மை தான். யாரும் பயப்பட வேண்டாம். நான் நன்றாக உள்ளேன். கொரோனா வந்தால் யாரும் பயப்படத் தேவையில்லை. பரிசோதனை செய்துகொண்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். மருத்துவர்கள் சொன்ன மருந்து மாத்திரைகளைச் சாப்பிடுங்கள். தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தான் எனக்குப் பெரிய அளவு பாதிப்பு இல்லை. அதேபோல நீங்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். உடலுக்கு மிகவும் நல்லது. எனக்கு அடுத்த பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதியானால் வீட்டில் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் எனச் சொல்லியிருக்கிறார்கள். பயப்படத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

Previous articleதிடீர் திடீரென வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 309 பேர்; வெளியான காரணம்!
Next articleமன்னாரில் சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!