மன்னாரில் சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மன்னார் மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை பெய்த கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

இன்று வியாழக்கிழமை காலை தொடக்கம் மழையோடு கூடிய மந்தமான கால நிலை காணப்படுவதுடன், தொடர்ச்சியாக மழை பெய்வதற்குறிய அறிகுறிகளும் காணப்படுவதை அவதானிக்க கூடியதாக உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த மழை காரணமாக மன்னார் தீவு பகுதியின் சில இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், சில வீதிகளிலும் நீர் தேங்கி காணப்படுவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Previous articleயாரும் பயப்பட வேண்டாம் – செந்தில் அதிரடி விடியோ!
Next articleநாட்டில் இன்றைய தினமும் மேலும் 127 பேருக்கு கொரோனா!