சற்றுமுன் யாழில் 8 பேருக்கு தொற்று!

யாழ். குடாநாட்டில் மேலும் எண்மர் உட்பட வட மாகாணத்தில் 10 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்றைய தினம் (ஏப்-15) 186 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவ்வாறு 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத் தரப்பு தகவல்கள் உறுதி செய்துள்ளன.

அதன் அடிப்படையில், யாழ். மாவட்டத்தில் 08 பேருக்கும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைகளில் தலா ஒவ்வொருவருக்குமாக 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். குடாநாட்டில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள எண்மரும் நல்லூர் சுகாதார அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleசுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தடை செய்யப்பட்ட ஆமைகள் இலங்கையில்!
Next articleஇன்றும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் நால்வர் பலி!