இன்றும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் நால்வர் பலி!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 608 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் மேலும் 127 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

லேும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று 157 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 92,308 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleசற்றுமுன் யாழில் 8 பேருக்கு தொற்று!
Next articleஅனைத்து சீரியல் படப்பிடிப்புகளும் நிறுத்தம்?