அனைத்து சீரியல் படப்பிடிப்புகளும் நிறுத்தம்?

குடும்பத்தை கவனித்துக் கொண்டு வீட்டிலேயே இருக்கும் தாய்மார்களுக்கு அன்றாடம் பொழுதுபோக்காக இருப்பதே சீரியல் தான்.

அந்த சீரியல்கள் இல்லை என்றால் அவர்களுக்கே ஒருமாதிரி இருக்கும். அவர்களுக்காகவே எல்லா தொலைக்காட்சியும் பல விதமான சீரியல்களை கொண்டு வருகின்றன.

சில ரீமேக் சீரியல்களும் மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருக்கிறது. லாக் டவுன் முடிந்து இப்போது தான் சீரியல் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளது.

ஆனால் இப்போது சீரியல் படப்பிடிப்புகளுக்கு மீண்டும் பிரச்சனை வந்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் இல்லை, மகாராஷ்டிராவில். அங்கு கொரோனா அதிகரித்து வருவதால் அரசு எந்தவித படப்பிடிப்பும் இருக்க கூடாது என உத்தரவு போட்டுள்ளனர்.

தமிழ்நாட்டிலும் கொரோனா அதிகரித்து வருவதால் படப்பிடிப்புகள் நிறுத்தப்படுமோ என்கிற அச்சம் கலைஞர்களுக்கு உள்ளது, சீரியல் என்னாவது என்கிற பயம் மக்களுக்கும் உள்ளது.

Previous articleஇன்றும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் நால்வர் பலி!
Next articleஅரசின் வீட்டுத்திட்டத்தை நம்பி தற்காலிக வீட்டை இடித்த குடும்பம் மழையில் படும் பாடு!