மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் மரணம்!

மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பிரதேசத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலையர்கட்டு கிராமத்தில் இன்று மாலை மின்னல் தாக்கியதில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தற்போது அப்பகுதியில் சிறுபோக வேளாண்மைச் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் மும்முரமாக வயலில் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மாலை வேலையில் திடீரென அப்பகுதியில் பலத்த இடி மின்னல், மற்றும் காற்றுடன் மழை பெய்துள்ளது.

இதன்போது மலையர்கட்டு கிராமத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி வயலில் வேலை செய்து கொண்டிருந்த 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான நல்லதம்பி மோகனசுந்தரம் எனும் விவசாயி உயிரிழந்துள்ளதாக அப்பகுதி கிராம சேவகர் தெரிவித்தார்.

தற்போது சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous articleநாட்டில் மேலும் நோய்த் தொற்று எண்ணிக்கை உயர்வடையும் என எச்சரிக்கை!
Next articleஇந்தியாவில் 2 லட்சத்தை தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!