இந்தியாவில் 2 லட்சத்தை தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் ஒரு நாள் பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் 2,00,739 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,40,74,564 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 1,038 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 1,73,123 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,24,29,564 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 14,71,877 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Previous articleமின்னல் தாக்கி விவசாயி ஒருவர் மரணம்!
Next articleமூக்கடைப்பை சரிசெய்வதற்கான சில எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்!