கொரோனா சிகிச்சையளிக்க உதவிய 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் உட்பட தொழிலாளர்களுக்கு அனைவருக்கும் நிரந்தர குடியுரிமை!

 கொரோனா தொற்றின் போது சிகிச்சையளிக்க உதவிய 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு கனடாவில் நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படவுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை குடிவரவு அமைச்சர் மார்கோ மெண்டிசினோ நேற்று வெளியிட்டுள்ளார்.

மே 6 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் இந்த திட்டத்தின் கீழ், சுகாதார சேவையில் குறைந்தது ஒரு வருட பணி அனுபவம் கொண்டவர்கள், பலசரக்கு வர்த்தக நிலைய காசாளர்கள் தொடக்கம், அலமாரியில் பொருட்களை அடுக்குவோர், லொறி சாரதிகள் மற்றும் பண்ணை தொழிலாளர்கள் வரை – பல்வேறு அத்தியாவசிய துறைகளிலும் பணியாற்றிய தொழிலாளர்கள் மற்றும் கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் இரண்டாம் நிலைக்குப் பிந்தைய பட்டப்படிப்பை முடித்த பட்டதாரிகளுக்கே இவ்வாறு நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Previous articleகொழும்பில் கும்பல் ஒன்றின் கொடூர தாக்குதல் – தப்பியோடிய சாரதி
Next articleதிடீரென நிறுத்தப்பட்ட தளபதி 65 படத்தின் ஷூட்டிங்!