திடீரென நிறுத்தப்பட்ட தளபதி 65 படத்தின் ஷூட்டிங்!

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய வசூல் சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் ஷூட்டிங் ஜார்ஜியாவில் தொடங்கப்பட்டுள்ளது என புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது தளபதி 65 படப்பிடிப்பு நடந்து வரும் ஜார்ஜியாவில் கனமழை என்பதால் அதன் படப்பிடிப்பு 3 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous articleகொரோனா சிகிச்சையளிக்க உதவிய 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்கள் உட்பட தொழிலாளர்களுக்கு அனைவருக்கும் நிரந்தர குடியுரிமை!
Next articleயாரெல்லாம் பூண்டை உணவில் சேர்த்து கொள்ளக்கூடாது ஏன்!