வவுனியா, தோணிக்கல் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 பேருக்கு கொரொனா!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 பேருக்கு நேற்று (15.04) மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று வெளிநாடு செல்வதற்காக சுகாதார பரிசோதர்களின் மூலம் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது,

குறித்த பி.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகிய நிலையில் குறித்த குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த நபர்களை கொரோனா தடுப்பு வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். 

Previous articleஇரட்டை சகோதரிகளை திருமணம் செய்த இருவர் முல்லைத்தீவில் மின்னல் தாக்கி பலி!
Next articleநம்பர் கேட்ட ரசிகருக்கு பொலிஸ் நம்பரை கொடுத்த சுருதி!