தடுப்பூசி போட்டாலும் கொரோனா வரும்!

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் இதனை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

பொது மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மாநிலம் முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இன்று நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதன் பின் பேசிய அவர், ‘பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கொரோனா வரும்.

ஆனால் உயிரிழப்புகள் போன்ற பெரிய பாதிப்புகள் இருக்காது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னரும் முக்கவசம் அணிய வேண்டும். அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மிகவும் திறமைசாலிகள்” எனத் தெரிவித்தார்

Previous articleநம்பர் கேட்ட ரசிகருக்கு பொலிஸ் நம்பரை கொடுத்த சுருதி!
Next articleநாடு பூராகவும் சிவில் உடையில் பொலிஸார் கடைமையில்!