பொதுமக்கள் உரிய முறையில் சுகாதாரப் பரிந்துரைகளை பின்பற்றுகின்றார்களா, என்பதைக் கண்டறிய இன்று நாடு பூராகவும் பொலிஸார் சிவில் உடையில் கடைமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முகக் கவசம் அணிதல் உட்பட சுகாதார பரிந்துரைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.