மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பிரதேசத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலையர்கட்டு கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை (15) மாலை மின்னல் தாக்கியதில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த 32 வயதுடைய நல்லதம்பி மோகனசுந்தரம் என்ற விசாயி இஸ்த்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதே நேரம் வந்தாறுமூலையில் இன்று ஒரே இடத்தில் நின்ற 6பேருக்கு மின்னல் தாக்கியுள்ளது.
மின்னல் தாக்கியதில் பாதிக்கப்பட்ட 6 பேரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.