யாழ்.மாவட்டத்தில் கடந்த சில தினங்களில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு – மக்களுக்கு பகீர் எச்சரிக்கை

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை குறைவடைந்தபோதும் கடந்த சில தினங்களில் கொரோனா மரண எண்ணிக்கை அதிகரித்துள்ளமை கவலையளிப்பதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கவலை தொிவித்துள்ளார்.

இன்று மாலை ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், கடந்த சில மாதங்களில் யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்திருந்தது.

பின்னர் வேகம் குறைவடைந்து தொற்றாளர் எண்ணிக்கையும் குறைவடைந்தது. ஆனாலும் தற்போது கொரோனா தொற்றினால் உயிரிழப்போர் எண்ணிக்கை கடந்த 3 நாட்களில் உயர்ந்திருக்கின்றது. மாவட்டத்தில் இதுவரை 14 பேர் தொற்றினால் உயர்ந்துள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை மிக இறுக்கமாக பின்பற்றுவதன் ஊடாக தொற்றிலிருந்து உங்களையும், உங்கள் சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்ள முடியும். மேலும் மாவட்டத்தில் தற்போது 1784 நபர்கள் சுய தனிமைப்படுத்திலில் உள்ளனர்.

மாவட்டத்தை சேர்ந்த 600 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும் 500 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் பகுதி பகுதியாக தளர்த்தப்படும் நிலையில் மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி

பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என அவர் கேட்டுள்ளார்.

Previous articleயாழில் தனியார் கல்வி நிலையங்களை திறக்க அனுமதி!
Next articleசட்டவிரோத மதுபானம் அருந்தியதில் மூவர் பலி!