மூடப்பட்டிருந்த யாழ். கல்வி வலய பாடசாலைகளும் திங்கட்கிழமை ஆரம்பம்!

கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்டிருந்த யாழ்.கல்வி வலயப் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கள் தொடக்கம் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கான அனுமதியினை சுகாதாரத் துறையினர் வழங்கியள்ளனர். அதற்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் என்று யாழ்.மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

பாடசாலைகளைத் தவிர்ந்த திருமண மண்டபங்கள், மக்கள் ஒன்றுகூடுவதற்கான தடைகள் மேலும் ஒரு வாரத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

Previous articleசட்டவிரோத மதுபானம் அருந்தியதில் மூவர் பலி!
Next articleவவுனியாவில் வீதியில் யாசகம் செய்பவரை மோதிவிட்டு தப்பியோடிய மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள்!