வவுனியாவில் வீதியில் யாசகம் செய்பவரை மோதிவிட்டு தப்பியோடிய மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள்!

வவுனியா புகையிரத நிலைய வீதியில் யாசகம் செய்பவரை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மோதித்தள்ளி விட்டு அவ்விடத்திலிருந்து தப்பித்து சென்றுள்ளதுடன் முதியவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கிக்கு முன்பாக நேற்று (15.04) மாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

வவுனியா, புகையிரத நிலைய வீதியில் உள்ள தனியார் வங்கிக்கு முன்பாக வீதியோரத்தில் முதியவர் ஒருவர் யாசகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

குறித்த வீதியூடாக மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் வீதியோரமாக யாசகத்தில் ஈடுபட்ட நபரை மோதித்தள்ளிவிட்டு அவ்விடத்திலிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.

அதன் பின்னர் யாசகத்தில் ஈடுபட்ட முதியவர் தலையில் பலத்த காயத்துடன் வீதியில் கிடந்துள்ளார்.

இதனை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாரின் உதவியுடன் 1990 அவசர நோயாளர் காவு வண்டி சேவையூடாக படுகாயமடைந்த முதியவரை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இது தொடர்பில் வவுனியா போக்குவரத்துப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleமூடப்பட்டிருந்த யாழ். கல்வி வலய பாடசாலைகளும் திங்கட்கிழமை ஆரம்பம்!
Next articleமுல்லைத்தீவில் கோடாலி எடுக்கச் சென்றவரை மின்னடித்தது தூக்கி எறிந்தது!