அமெரிக்காவில் துப்பாக்கிதாரியின் தாக்குதலில் 8 பேர் உயிரிழப்பு 60 பேர் வரை காயம்!

அமெரிக்காவில் இண்டியானாபொலிஸ் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள வணிக நிறுவனம் ஒன்றில் துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததாகவும், 60 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

துப்பாக்கி சூட்டு காயங்களுடன் மீட்க்கப்பட்டவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அந் நாட்டு நேரப்படி வியாழக்கிழமை இரவு 11 மணிக்குப் பிறகு இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் நடந்துள்ளதாக இண்டியானாபோலிஸ் பெருநகர காவல் துறை அதிகாரி ஜெனீ குக் செய்தியாளர்களிடம் கூறினார்.

துப்பாக்கி சூட்டினை மேற்கொண்ட துப்பாக்கி தாரி தனது உயிரை மாய்த்துக் கொண்டதாகவும், அவரது உடலை இரவு 11.23 மணிக்கு பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Previous articleதுரைமுருகன் வீட்டில் திருட வந்த கொள்ளையர்கள் ஒன்றும் கிடைக்காமல் சோகக்கடிதம் எழுதி வைத்து விட்டு திரும்பினர்!
Next articleஅரசாங்கத்தை வீழ்த்துகின்ற நிலையில் பங்காளிக் கட்சிகள் ஒருபோதும் இருக்காது!