நண்பன் கொலைக்கு பழி வாங்கிய நண்பர்கள்!

இந்தியாவில் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் தெப்பகுளம் எனும் இடத்தின் அருகே சென்ற வருடம் எப்ரல் மாதம் 7ம் திகதி தாமரைக்கனி என்ற இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தார் .

குறித்த கொலையை கபடி விளையாட்டில் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த பகுதியை சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் அண்ணாமலை ஈஸ்வரன் என்பவரும் அவரது மகன் உட்பட 6 பேரும் இணைந்து செய்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்தது .

குறித்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக ஒன்றிய கவுன்சிலர் அண்ணாமலை ஈஸ்வரன் உட்பட 6 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவர்கள் ஜாமீனில் வெளியே வந்திருந்தனர் .

இந்நிலையில் நேற்று அண்ணாமலை ஈஸ்வரனை தாமரைக்கனியின் நண்பர்களான குழந்தைவேல் குமார், மதியழகன், ஜெகதீஸ்வரன் ஆகிய 3 பேரும் சரமாரியாக வெட்டி சாய்த்ததில் அண்ணாமலை ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் .

Previous articleநீரில் மூழ்கிக் காணாமற்போயிருந்த தந்தை – மகனின் சடலங்கள் கண்டெடுப்பு
Next articleஇந்திய மீனவர்களுக்கு ஒரு நீதி இலங்கை மீனவர்களுக்கு ஒரு நீதியா?