யாழில் புதுவருட தினத்தில் கணவன் என்று சொல்லப்படும் நபரால் பெண் ஒருவருக்கு நேர்ந்த கொடுமையான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. புதுவருட தினத்தில் குளித்துவிட்டு துவாயுடன் வந்த மனைவியுடன் குறித்த கணவன் வாக்குவாதம் புரிந்துள்ளார்.
வாக்குவாதம் முற்றவே கோபமடைந்த கணவன் மனைவியை திடீரென தாக்கிய நிலையில் , அடி தாங்க முடியாமல் வீட்டைவிட்டு மனைவி ரோட்டுக்கு ஒட்டியுள்ளார். அப்போதும் துரத்தி துரத்தி தாக்க முற்பட்ட வேளை அப் பெண் கட்டியிருந்த துவாய் அவிழ்ந்து விழுந்துள்ளது.
அப்போதும் கூட மனைவியின் நிலையை ஜோசிக்காமல் தொடர்ந்து அந்த நபர் தாக்கியுள்ளதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து அயல் வீட்டு பெண்கள் அப்பெண் மீது இருந்த உடைகளை போர்த்தி காப்பாற்றியுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் நேற்றையதினம் குறித்த பெண்ணின் கணவன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.