மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 9ஆம் தேதி வெளியான திரைப்படம் கர்ணன்.
வெளியாகி இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள இப்படம், தற்போது வரை வசூல் மலையை குவித்து வருகிறது.
இப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்று படத்தின் தலைப்பு என்று கூட கூறலாம்.
இந்நிலையில் கர்ணன் படத்திற்கு முதன் முதலில் கர்ணன் என தலைப்பு வைக்கப்படவில்லையாம்.
ஆம் முதன் முதலில் கர்ணன் படத்திற்கு வைக்கப்பட்ட தலைப்பு பாண்டிய ராஜாக்கள் என்று படத்திற்கு படத்தின் கலை இயக்குனர் சமீபத்திய பேட்டி ஒன்றில்கூறி உள்ளார்.
கர்ணன் என்றே தலைப்புக்கே பல பிரச்சனைகள் வந்த நிலையில் பாண்டிய ராஜாக்கள் என்று தலைப்பு வைத்திருந்தால் கண்டிப்பாக ஏகப்பட்ட பிரச்சனைகள் படத்திற்கு வந்திருக்கும் என்கிறது திரையுலக வட்டாரங்கள்.