கிளிநொச்சியில் பால் புரைக்கேறி நான்கு மாத குழந்தை பரிதாபமாக மரணம்!

கிளிநொச்சி மாவட்டம் முழங்காவில் பிரதேசத்திற்கு உட்பட்ட குமுழமுனைப் பகுதியில் நான்கு மாத ஆண் குழந்தை ஒன்று பால் புரைக்கேறி பரிதாபகரமான உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 4மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பால் புரைக்கேறியதால் குழந்தை சிரமப்பட்டதை அடுத்து முழங்காவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

மேலதிக விசாரணைகளை முழங்காவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Previous articleகர்ணன் படத்திற்கு முதன் முதலில் வைக்கப்பட்ட தலைப்பு இது தான் – என்ன தெரியுமா?
Next articleசுவை மட்டுமல்ல மருத்துவ குணமும் நிறைந்த மாம்பழம்!