கடைசி ஆசை முழுமை அடையாமல் இறந்த நடிகர் விவேக்!

நேற்று நடிகர் விவேக் அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு சுயநினைவு இல்லாத நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

‘அவருக்கு ECMO கருவி பொறுத்தப்பட்டு சிகிச்சை அளித்து வருவதாகவும், அவரது நிலை கொஞ்சம் மோசமாக தான் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டார்கள்.

இந்த நிலையில் இன்று காலை நடிகர் விவேக் சிகிச்சை பலன் இன்றி அதிகாலை 4.45 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

ஆனால் அவரது கடைசி ஆசை முழுமை அடையாமலேயே உயிரிழந்துள்ளது அனைவருக்கும் பெரிய சோகத்தை கொடுக்கிறது. அவர் இதுவரை கமல்ஹாசனுடன் மட்டும் படம் நடிக்கவே இல்லை.

அவருடன் மட்டும் நடித்துவிட்டால் எனது ஆசை நிறைவேறிவிடும் என்று கூறியிருப்பார். அவரது ஆசை நிறைவேறும் வகையில் இந்தியன் 2 படத்தில் அவருடன் நடித்து வந்தார்.

ஆனால் அந்த ஆசை முழுமை அடையாமலேயே நம்மை விட்டு பிரிந்துவிட்டார் நடிகர் விவேக்.

Previous articleகுடும்ப தகராறினால் குடும்பஸ்த்தர் ஒருவர் கத்திகுத்துக்குள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!
Next articleயாழில் சூடுபட்டவர் அவசர சிகிச்சைப்பிரிவில்!