யாழில் சூடுபட்டவர் அவசர சிகிச்சைப்பிரிவில்!

யாழ்ப்பாணம் வடமராட்சி முள்ளி பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த நபருக்கு வயிற்றில் துப்பாக்கிச்சூட்டு காயமுள்ளதால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், காலில் துப்பாக்கிச்சூட்டு காயமேற்பட்ட மற்றைய நபருக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

முள்ளி பகுதியில் வீதித் தடையை மீறி பயணித்த கப் வாகனம் மீது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கான இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இன்று காலை குறித்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் கட்டளையை மீறி பயணித்த கெப் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Previous articleகடைசி ஆசை முழுமை அடையாமல் இறந்த நடிகர் விவேக்!
Next articleகிளிநொச்சியில் நான்கு மாதக் குழந்தை ஓன்று பால் புரைக்கேறி உயிரிழப்பு!