யாழில் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் உட்பட ஏழு பேருக்குக் கொரோனா!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ். பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் இருவர் உட்பட ஏழு பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடங்களில் 588 பேரின் மாதிரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்படி, யாழ். மாநகரின் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒருவர் யாழ். பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் எனவும் ஏனைய இருவரும் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சண்டிலிப்பாய் மருத்துவ அதிகாரி பிரிவில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த இருவருக்கும் தெல்லிப்பளை வைத்தியசாலையில் தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleகிளிநொச்சியில் நான்கு மாதக் குழந்தை ஓன்று பால் புரைக்கேறி உயிரிழப்பு!
Next articleயாழ்.மாவட்டத்தில் முடக்கப்பட்டுள்ள திரையரங்குகள், திருமண மண்டபங்களை முடக்கலில் இருந்து விடுவிப்பதா இல்லையா என 2 வாரங்களின் பின்பே தீர்மானம்!