யாழ் மாவட்டத்தில், 5000 ரூபா புத்தாண்டு நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படாத, தகுதிபெற்ற குடும்பங்களுக்கு, அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அவர் இதனை தெரிவித்துள்ளார். , யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 148,178 குடும்பங்கள் 5 ஆயிரம் ரூபா புத்தாண்டு நிவாரணக் கொடுப்பனவுக்காக தகுதி பெற்றுள்ளன.
அவற்றில் 111,855 குடும்பங்களுக்கு இதுவரையில் நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.