யாழில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம்- மானிப்பாயைச் சேரந்த பெண்ணொருவர் (65 வயது) கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

குறித்த பெண், யாழ்.போதனா வைத்தியசாலையில், நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயிக்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், வைரஸ் தொற்று காரணமாக இன்று (சனிக்கிழமை) உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உயிரிழந்தவரின் உடலை, சுகாதார நடைமுறைகளுடன் முள்ளேரியாவில் மின்தகனம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

இதற்கமைய யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 13பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleகிளிநொச்சியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை!
Next articleமக்கள் வெள்ளத்தில் சின்னக் கலைவாணர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!