மக்கள் வெள்ளத்தில் சின்னக் கலைவாணர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!

மறைந்த பிரபல நடிகரும் சமூக ஆர்வலருமான சின்னக் கலைவாணர் விவேக்கின் இறுதி ஊர்வலம் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது  வீட்டிலிருந்து தொடங்கியுள்ளது.

சுமார் நான்கு மணியளவில் தொடங்கியுள்ள இறுதி ஊர்வலத்தில்  ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மூலம் சமூகக் கருத்துக்களை விதைத்த விவேக், நிஜ வாழ்விலும் பல சமூகச் செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், மாரடைப்பு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்த அவர், இன்று அதிகாலை காலமானார்.

அவரது மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது உடலுக்கு பொதுமக்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளதுடன் இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், விவேக்கின் உடல், மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ள நிலையில், அவருக்கு 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை செலுத்தப்படவுள்ளது.

Previous articleயாழில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஒருவர் உயிரிழப்பு!
Next articleஇலங்கையில் குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு