குளிக்க போன இடத்தில் நீரில் மூழ்கி பலியான மாணவன்!

கினிகத்தேனை, எபடீன் நீர்வீழ்ச்சியில் நீராடிக் கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.

நீர்வீழ்ச்சியை பார்வையிட வந்த சிலர் நீராடிய போது குறித்த சிறுவன் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வௌ்ளவத்தையை சேர்ந்த 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஓட்டமாவடியில் தண்டவாளத்தில் மோட்டார் சைக்கிள் சறுக்கி ஒருவர் பலி!
Next articleவவுனியாவில் சட்டவிரோத மரங்களை கடத்திச்சென்ற வாகனம் மோதி இரண்டு இராணுவத்தினர் படுகாயம்!