யாழ்.போதனாவில் சற்றுமுன் பதிவான கொரோனா மரணம்!

மானிப்பாயைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவரே இன்று உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோயினால் பாதிக்கப்பட்ட அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட்-19 நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

பெண்ணின் சடலம் சுகாதார நடைமுறைகளின் கீழ் முல்லேரியாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு மின்தகனம் செய்யப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleவவுனியாவில் சட்டவிரோத மரங்களை கடத்திச்சென்ற வாகனம் மோதி இரண்டு இராணுவத்தினர் படுகாயம்!
Next articleசுமந்திரனை உடன் நீக்குங்கள் – சம்பந்தனுக்கு தவராசா கடிதம்