கடற்கரையில் பகுதியில் சிதைவடைந்த நிலையில் சடலமொன்று மீட்பு!

மாத்தறை வெலிகமவில் உள்ள கலுவெல்ல கடற்கரையில் இன்று (17) முற்பகல் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது.

ஆண் ஒருவரின் சடலமொன்று இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.

உடல் அடையாளம் காண முடியாத வகையில் சிதைவடைந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக சடலம் மாத்தறை வைத்தியசாலையின் பிரேத அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Previous articleபேருந்தின் சில்லில் சிக்கி பெண் பலி! – வௌியான அதிர்ச்சி சிசிரிவி காணொளி
Next articleகனடா கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது; பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!