நடமாடும் போலிப் பிக்கு தொடர்பில் மக்களிற்கு முக்கிய அறிவித்தல்!

மீகலாவ – பகுதியில் அமைந்துள்ள விகாரை ஒன்றில் போலி பிக்குவாக வருகைதந்த நபரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீகலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விகாரை ஒன்றுக்கு தான் ஒரு பிக்கு எனத் தெரிவித்து நபரொருவர் வருகைத்தந்துள்ளதுடன் , அவர் மீது சந்தேகம் கொண்ட விகாரதிபதி அவரிடம் விபரங்களை கேட்டு அறிய முயற்சித்த போது குறித்த நபர் அப்பகுதியில் காணப்பட்ட வனப்பகுதிக்குச் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

குறித்த நபர் ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபடுவதற்காகவே இவ்வாறு மாறு வேடத்தில் வந்திருக்கலாம் என்று கருதப்படுவதால் சந்தேக நபரை அடையாளம் காணுவதற்காக பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

இந்நிலையில் மேற்படி புகைப்படத்தில் காணப்படும் நபரை அடையாளம் கண்டால் 071-8591287 என்ற இலக்கத்திற்கு தொடர்புக் கொண்டு தெரிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Previous articleகனடா கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது; பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!
Next articleரொறென்ரோவில் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடக்கம்!