யாழின் இன்றைய தொற்று விபரம்!

யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான பொலிஸாரின் எண்ணிக்கை 03 ஆக அதிகரித்துள்ளது. யாழ்ப்பாண ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் யாழ்.போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தலில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய நாள் பொலிஸார் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் தொற்றுக்குள்ளான பொலிஸாரின் எண்ணிக்கை 03 ஆக அதிகரித்துள்ளது.

இன்றை பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் விபரம் வருமாறு,

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் யாழ். குடாநாட்டில் 10 பேர் உட்பட வடக்கில் மேலும் 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று ஏப்-17 404 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவ்வாறு 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 14 தொற்றாளர்கள் குறித்த மேலதிக விபரங்கள் ஆய்வுகூட தரப்பில் இருந்து வழங்கிய தகவலின் அடிப்படையில்,

யாழ். சிறைச்சாலையில் – 04

பருத்தித்துறை சுகாதார அதிகாரி பிரிவு – 02 (தொற்றாளருடன் தொடர்பிலிருந்தவர்கள்)

தெல்லிப்பழை சுகாதார அதிகாரி பிரிவு – 01 (தொற்றாளருடன் தொடர்பிலிருந்தவர்)

சண்டிலிப்பாய் சுகாதார அதிகாரி பிரிவு – 01 (தொற்றாளருடன் தொடர்பிலிருந்தவர்)

உடுவில் சுகாதார அதிகாரி பிரிவு – 01 (தொற்றாளருடன் தொடர்பிலிருந்தவர்)

யாழ். போதனா வைத்தியசாலை – 01 (பொலிஸ் உத்தியோகத்தர்)

கிளிநொச்சி தேசிய தொற்றுநோய் வைத்தியசாலை – 02

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை – 02

Previous articleரொறென்ரோவில் தடுப்பூசி செலுத்தும் மருந்தகங்கள் தற்காலிகமாக மூடக்கம்!
Next articleவவுனியாவில் இராணுவத்தினரை மோதித்தள்ளிய கடத்தல் வாகனமும் விபத்திற்குள்ளாகியது!