ஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினர் திருமதி.வின்சன் சுபத்ரா காலமானார்!

அனலைதீவில் பல செயற்பாடுகளை மேற்கொண்ட ஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினர் திருமதி.வின்சன் சுபத்ரா அவர்கள் நேற்றையதினம் இரவு மாரடைப்பினால் காலமானார்.

இந்த தகவலை குணாளன் கருணாகரன் என்பவர் முகநூலில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

மேலும் வின்சன் சுபத்ரா என்பவர் குறித்து தெரிவிக்கையில்,

கொரோனா காரணமாக பெரும் பாதிப்புகளுக்கு உள்ளான அனலைதீவு, அல்லைப்பிட்டி பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 குடும்பங்களுக்கு ரூபாய் 42000 பெறுமதிமிக்க உலர் உணவுப்பொருட்கள், முககவசம், கிருமிநாசினி பொருட்கள் என்பன தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தீவக கிளையினரால் வழங்கிய குறித்த சேவையில் முக்கிய பங்கினையாற்றியுள்ளார்.

Previous articleமாவை சேனாதிராஜாவே முதலமைச்சர் வேட்பாளர் – சித்தார்த்தன் எம்.பி பகீர்
Next articleபோதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்தார் உறவினர் சதியால் தம்பதிக்கு வெளிநாட்டில் ஜெயில் தண்டனை!