சப்ரகமுவ பல்கலைக்கழகம் நாளை திறக்கப்படுகிறது!

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட மேற்கு மாகாணத்திலுள்ள தஹம் பாடசாலைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இலங்கை முழுவதும் உள்ள அனைத்து தஹம் பாடசாலைகளிலும், இனி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என புத்த விவகார ஆணையகத்தின் ஆணையாளர் ஜெனரல் சுனந்த காரியபெரும கூறியுள்ளார்.

இதற்கிடையில், சப்ரகமுவ பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை நாளை (திங்கட்கிழமை) ஆரம்பிப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி தொழில்நுட்ப பீடத்தின் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளே முதலில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து நிறுவனங்களின் கல்வி நடவடிக்கைகளும் சுகாதார வழிகாட்டுதல்களின்படி மேற்கொள்ளப்பட வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleசிவாஜிலிங்கம் திடீர் உடல்நல குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதி!
Next articleஅனைத்து பாடசாலைகளும் நாளை மீள திறக்கப்படுகிறது!