கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கான பதில் பணிப்பாளராக வைத்திய கலாநிதி S. சுகந்தன் நியமனம்!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கான பதில் பணிப்பாளராக வைத்திய கலாநிதி S. சுகந்தன் நியமிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இதுவரை நிரந்தரமான ஒரு பொறுப்பு வைத்தியதிகாரி இன்றி இயங்கி வருகின்றது.

குறிப்பாக இந்த வைத்தியசாலையில் கடமையாற்றிய பணிப்பாளர் கடந்த ஆண்டு மேற்படிப்புக்காக சென்ற நிலையில் அந்த வெற்றிடத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட வைத்தியசாலையின் பணிப்பாளரும் மேற்படிப்புக்காக செல்கின்ற நிலையில் வைத்தியசாலை பணிப்பாளர் இல்லாத நிலை காணப்பட்டது.

இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கான பணிப்பாளராக வைத்தியகலாநிதி S. சுகந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்தகால யுத்தம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை கடந்த 2010ஆம் ஆண்டு சொந்த இடத்தில் இயங்க ஆரம்பித்துள்ள போதும் இதுவரை நிரந்தரமான பணிப்பாளர் யாரும் நியமிக்கப்படாத நிலை காணப்படுகிறது.

இதுவரை 12 பேர் வரையில் பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களும் கடந்த காலங்களில் மேலதிக படிப்புகளுக்காக சென்றுள்ளனர்.

பல்வேறு கட்டுமான தேவைகளையும் வைத்தியத்துறை நோக்கிய அபிவிருத்தியையும் வைத்திய சேவையினை வழங்கும் குறித்த வைத்திய வைத்தியசாலைகான நிரந்தரமான பணிப்பாளர் ஒருவரை நியமிக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை பணியாற்றியவரும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் சேவையாற்றிய வைத்தியர் சுகந்தன் அவர்கள் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Previous articleஅனைத்து பாடசாலைகளும் நாளை மீள திறக்கப்படுகிறது!
Next articleஈரானில் 5.6 ரிச்டெர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்!