சகல பாடசாலைகளும், நாளை திங்கட்கிழமை இரண்டாம் தவணை கல்விக்காக திறக்கப்படும்!

இலங்கையிலுள்ள சகல பாடசாலைகளும், நாளை திங்கட்கிழமை இரண்டாம் தவணைக் கற்றல் செயற்பாடுகளுக்காக திறக்கப்படவுள்ளன.

முதலாம் தவணைக்கான விடுமுறை கடந்த 9ஆம் திகதி வழங்கப்பட்டிருந்த நிலையில், நாளைய தினம் முதல் இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதனை கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும், பாடசாலைகளின் தொற்று நீக்கும் நடவடிக்கைகளை அந்தந்த பாடசாலைகளின் அதிபர்கள் குறித்த பிரதேச பொதுசுகாதார பரிசோதகரை தொடர்புகொண்டு மேற்கொள்ளுமாறும் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleவவுனியா வைரவபுளியங்குளம் குளக்கட்டில் மருத்துவ கழிவுகளை வீசியவருக்கு நேர்ந்த கெதி!
Next articleமன்னாரில் டிப்பரில் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடி பெறுமதியான போதைப்பொருள்!