மியன்மார் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 12 இலங்கை மீனவர்கள் விடுவிப்பு!

மியன்மார் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 12 இலங்கை மீனவர்களை, மியன்மார் நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் விடயத்தை மியன்மாருக்கான இலங்கை தூதுவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் மியான்மர் அரசாங்கத்திடம் இருந்து நாடு திரும்புவதற்கான உத்தியோகபூர்வ நாடுகடத்தல் உத்தரவை எதிர்பார்த்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ளதாக அந்நாட்டுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மீனவர்களுக்கு மன்னிப்பு வழங்குமாறு இலங்கை அரசு மியான்மர் அதிகாரிகளிடம் கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleபௌத்த விகாரை ஒன்றுக்குள் நுழைந்த மர்ம நபரால் பெரும் அச்சம்!
Next articleயாழில் மேலும் 13 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்கு இன்று கொரோனா!