போதைப்பொருளுடன் சிக்கிய கணவன் மனைவி!

தலங்கம பொலிஸாரினால் இன்று ஹீனட்டிகும்புற பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 500 கிராம் ஹெரோயினுடன் தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் குறித்த பெண் நோனாகம பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் என்பதுடன் , அவரது கணவன் அம்பலாந்தொட்ட பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவராவார்.

குறித்த சந்தேகநபர்கள் இருவரும் ஹெரோயின் விற்பனை செய்பவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

டுபாயில் வசிப்பதாக சந்தேகிக்கப்படும் களுசாகர மற்றும் அவருடன் வாழும் முத்து என்ற பெண் ஆகியோரே இதன் பின்னணியில் உள்ளவர்கள் என்று தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாகவும் தெரிவிகப்படுகின்றது.

Previous articleயாழ்.மாவட்டத்தில் கல்வி செயற்பாடுகள் நாளை ஆரம்பம் ஆனால் திரையரங்குள் தொடர் முடக்கலில்!
Next articleஅண்ணன் உடல்நலக் குறைவினால் இறந்த தகவலைக் கேட்ட தம்பியும் அடுத்த சில நிமிடங்களில் பரிதாபமாக மரணம்!