அண்ணன் உடல்நலக் குறைவினால் இறந்த தகவலைக் கேட்ட தம்பியும் அடுத்த சில நிமிடங்களில் பரிதாபமாக மரணம்!

அளவுகடந்த பாசம் வைத்த அண்ணன் உடல்நலக் குறைவினால் இறந்த தகவலைக் கேட்ட தம்பியும் அடுத்த சில நிமிடங்களில் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலமான தமிழகத்தில் மயிலாடுதுறையில் மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி (71). இவர் மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது தம்பி குணசேகரன்(69). இவர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இருவருக்கும் திருமணமாகி மகன் மற்றும் மகள் இருக்கும் நிலையில், தனது தம்பி குடியிருக்கும் பூர்வீக வீட்டிற்கு வீரமணி குடும்பத்தினருடன் வந்து கடந்த 4 மாதங்களாக அங்கேயே இருந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலையில் வீரமணிக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல தம்பி குணசேகரன் காரில் ஏற்றியுள்ளார். ஆனால் அதற்குள்ளே வீரமணியின் உயிர் பிரிந்தது. அண்ணன் உயிர் தனது கண்முன்னே பிரிந்ததை அவதானித்த குணசேகரனுக்கும் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்துள்ளார்.

இருவரையும் ஒரே இடத்தில் அருகருகில் குடும்பத்தினர் அடக்கம் செய்துள்ள நிலையில், ஒரே குடும்பத்தில் இவ்வாறு அடுத்தடுத்து அண்ணன் தம்பிகள் உயிரிழந்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இக்காலத்தில் சொத்துக்காக அடித்துக்கொள்ளும் அண்ணன் தம்பிகளுக்கு மத்தியில் இவ்வாறு அளவுகடந்த பாசத்தினை வைத்து, இறுதியில் ஒன்றாகவே உயிரிழந்துள்ளனர்.

Previous articleபோதைப்பொருளுடன் சிக்கிய கணவன் மனைவி!
Next articleபியூட்டி பார்லரால் அலங்கோலமாக மாறிய பிக்பாஸ் ரைசா!