பியூட்டி பார்லரால் அலங்கோலமாக மாறிய பிக்பாஸ் ரைசா!

சமீபத்தில் பியூட்டி பார்லர் சென்று பேஷியல் பண்ணதால் தன்னுடைய முகம் அலங்கோலமாக மாறியிருப்பதை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் நடிகை ரைசா.

பிரபல ரிவியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. என்னதான் நான்கு சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்றால் அது முதல் சீசன் தான்.

இதில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் தமிழ் சினிமாவில் நடிகர்- நடிகைகளாக வாய்ப்புகளை பெற்றார்கள், அதில் நடிகை ரைசாவும் ஒருவர்.

இந்நிலையில் நடிகை ரைசா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் ரைசாவின் கண்களுக்கு கீழ் வீக்கம் இருப்பதை கண்டு பலரும் ஷாக் ஆனார்கள்.

இதுகுறித்து தெரிவித்துள்ள ரைசா, சமீபத்தில் சாதாரண பேஷியல் போடுவதற்காக பைரவி செந்தில் என்பவரை சந்தித்ததாகவும், அப்போது அவர் தான் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் எனக்கு தேவையில்லாத விஷயங்களை செய்ததால் இப்படி ஆகிவிட்டது எனக்கூறி புலம்பியுள்ளார்.

இதன்பின்னர் தான் அவரிடம் பேச நினைத்தால், சந்திக்க மறுப்பதாகவும், ஊழியர்களிடம் கேட்டால் கூட அவர் வெளியூரில் இருக்கிறார் என்று சொல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பதிவிட்ட சில மணி நேரம் கழித்து மற்றொரு வீடியோவில் நடிகை ரைசாவின் காயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துள்ளதை காண முடிகிறது.

Previous articleஅண்ணன் உடல்நலக் குறைவினால் இறந்த தகவலைக் கேட்ட தம்பியும் அடுத்த சில நிமிடங்களில் பரிதாபமாக மரணம்!
Next articleஇறுதியாக நடித்த படத்திலும் விழிப்புணர்வு தீயாய் பரவும் விவேக்கின் காணொளி!