மறைந்த நடிகர் விவேக் கடைசியாக தான் நடித்த படத்தில் கூட நிலத்தடி நீரை நாம் பாதுகாக்க வேண்டும் என விழிப்புணர்வினை ஏற்படுத்தி நடித்திருக்கும் காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.
மாரடைப்பினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், தற்போது வரை அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் விவேக் குறித்த அரிய காணொளிகளையும், மரக் கன்றுகளை நட்டும் தங்களது இரங்கல்களை ரசிகர்கள் தெரிவித்து வருவதை நாம் அவதானித்து வருகின்றோம்.
தற்போது விவேக்கின் காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது. ஆம் கடந்த 10ம் திகதி நிலத்தடி நீர் சேகரிப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள காட்சியே இதுவாகும்.
இவர் கடைசியாக நடித்த படத்திலுள்ள காட்சி என்றும் தனது கடைசி படத்தில் கூட மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி சென்றுள்ளார் என்றும் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.