கொழும்பில் திடீரென ஒன்றுகூடிய 20 க்கும் மேற்பட்ட அழகிகளால் பெரும் சர்ச்சை!

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற இலங்கைக்கான திருமதி அழகு ராணி போட்டியின் இறுதி 20 போட்டியாளர்கள் கொழும்பில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர். இதில் குறித்த நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தங்களை ஏமாற்றிவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

புஷ்பிகா டி சில்வாவுக்கு கிரீடம் கொடுக்கப்பட்டமை தொடர்பில் அவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த போட்டியில் முதலில் முன்வைக்கப்பட்ட விதிகள் குறித்து தெளிவற்ற தன்மை இருப்பதாக அவர்கள் கூறினர்.

மேலும் அனைத்து போட்டியாளர்களும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், தங்கள் கணவர்களும் சாட்சிகளாக வரும்படி கூறப்பட்டதாகவும் பின்னர் அந்த நிபந்தனை புறக்கணிக்கப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

போட்டியில் நடைபெறவிருந்த கணவருடனான காட்சி இந்த முறை ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் அவர்கள் கூறினர். உலக திருமதி அழகியான கரோலின் ஜூரியின் நடத்தை சரியானது என்றும், இந்த குழு புஷ்பிகா டி சில்வா மீது சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும், அவர் வெற்றி பெற திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது என்றும் அவர்கள் கூறினர்.

Previous articleயாழ் பல்கலைக்கழக வளாக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீள் திறப்பு!
Next articleமூத்த மருத்துவ போராளி அருள் உயிரிழப்பு!