இராணுவத்தில் இணைந்தால்தான் வேலைவாய்ப்பு என்ற நிலைமை வடக்கு கிழக்கில் காணப்படுகிறது!

 வடக்கு- கிழக்கில் இராணுவத்தில் இணைந்தால்தான் வேலைவாய்ப்பு என்ற நிலைமையே தற்போது காணப்படுகின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முல்லைத்தீவு, வற்றாப்பளையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் சார்ள்ஸ் நிர்மலநாதன் மேலும் கூறியுள்ளதாவது, “ வடக்கு- கிழக்கிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு கல்வி மற்றும் அவர்களின் திறமைக்கேற்ற வேலைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வில்லை.

அதற்கு மாறாக இங்குள்ள இளைஞர்கள் இராணுவத்தில் இணைந்தால்தான் வேலைவாய்ப்பு என்ற நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.

ஆகவே நாம் அனைவரும் எந்ததொரு ஆட்சிக்கும் அடிபணியாமல் எம்முடைய மொழி, இனம் மற்றும் கலாசாரம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleபுற்றுநோய் பதார்த்தம் அடங்கிய தேங்காய் எண்ணெய்; இலங்கை சுங்கம் விடுத்த அறிவிப்பு
Next articleயாழ் திருநெல்வேலி சந்தையுடன் தொடர்புடைய 11 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்குக் கொரோனா!